ஆர்யா, நயன்தாரா, நஸ்ரியா நடிப்பில் கடந்த வருடம் ரிலீஸான ‘ராஜா ராணி’ படத்தின் இயக்குனர் அட்லி அவர்களுக்கும், தொலைக்காட்சி மற்றும் சிங்கம் படத்தில் அனுஷ்காவின் தங்கையாக நடித்த நடிகை ப்ரியாவுக்கும் நேற்று சென்னையில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு பல திரையுலக பிரபலங்கள் நேரில் வந்து அட்லிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
நடிகர் சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பர்களான அட்லி மற்றும் ப்ரியா இருவரும் சில காலமாக காதலித்து வந்ததாகவும், தற்போது அவர்களுடைய காதல் பெற்றோர் சம்மதத்துடன் வெற்றி அடைந்ததாகவும் கூறப்படுகிறது. சிவகார்த்திகேயன் தற்போது நார்வே நாட்டில் படப்பிடிப்பில் உள்ளதால் அவரால் இந்த நிச்சயதார்த்ததிற்கு வரமுடியாவிட்டாலும், டுவிட்டரில் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆர்யா, நயன்தாரா மற்றும் பலர் நேரில் அட்லிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருந்த அட்லி, ‘ராஜா ராணி’ திரைப்படத்தை அடுத்து தற்போது இரண்டாவது படத்திற்கான திரைக்கதையை அமைக்கும் பணியில் ஈடுபட்டுளார். திருமண தேதி விரைவில் அறிவிக்கப்படும் என அட்லியில் பெற்றோர்கள் கூறியுள்ளனர்.