நாடு முழுவதும் ஏ.டி.எம்.சேவைக்கட்டணம் திடீர் ரத்து
இந்தியா முழுவதும் இன்று முதல் அனைத்து ஏ.டி.எம்களும் செயல்பட தொடங்குகின்றன. இன்று முதல் ஒருசில நாட்களுக்கு ரூ.50, ரூ.100 மற்றும் ரூ.500 மட்டுமே ஏடிஎம் மிஷின்களில் கிடைக்கும். ஒருசில தொழில்நுட்ப பணிகள் முடிந்தவுடன் ரூ.2000 ஏடிஎம் மிஷின்களில் கிடைக்கும்
இந்நிலையில் இன்று அனைத்து ஏடிஎம்களிலும் கூட்டம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி கணக்கு வைத்திருக்கும் வங்கிகள் தவிர வேறு வங்கி ஏடிஎம்களில் 5 முறைக்கு பணம் எடுத்தால் சம்பந்தப்பட்ட வங்கி தனியாக சேவைக்கட்டணங்கள் வசூலித்து வருகின்றன.
இந்நிலையில் நாட்டு மக்கள் நலனை கருத்தில்கொண்டு, டிசம்பர் 31ம் தேதி வரை ஏடிஎம் மூலமாகப் பணம் எடுத்தால், சேவைக் கட்டணம் வசூலிக்கப்படாது என்று ஐசிஐசிஐ உள்ளிட்ட வங்கி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. எனவே பொதுமக்கள் அனைவரும் டிசம்பர் 31ம் தேதி வரை தங்கு தடையற்ற ஏடிஎம் சேவை மேற்கொள்ளலாம் என்றும், அதற்காக, கட்டணம் ஏதும் வசூலிக்கப்படாது என்றும் அறிவிக்கப்ப்ட்டுள்ளது.