அட்டாக் பாண்டி அரெஸ்ட் ஸ்டாலினுக்கு நெருக்கடியா? பெரும் பரபரப்பு

அட்டாக் பாண்டி அரெஸ்ட் ஸ்டாலினுக்கு நெருக்கடியா? பெரும் பரபரப்பு
attack pandy
பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் நேற்று மும்பையில் கைதான அட்டாக் பாண்டியை விசாரணை செய்தால் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரும் என்றும் குறிப்பாக பொட்டு சுரேஷ் கொலை செய்யப்படுவதற்கு முன்னர் மு.க.ஸ்டாலினை அட்டாக் பாண்டி ஏன் சந்தித்தார் என்ற கேள்விக்கு அட்டாக் பாண்டி சொல்லப்போகும் பதில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்றும் அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

மு.க. அழகிரியின் வலதுகரமாக செயல்பட்டு வந்த பொட்டு சுரேஷ், 31.1.2013 அன்று கொலை செய்யப்பட்டார். கொலை நடந்த 2-வது நாள் அட்டாக் பாண்டியின் ஆதரவாளர்கள் சிலர் மதுரை நீதிமன்றத்தில் சரண்டர் ஆகி வாக்குமூலமும் கொடுத்தனர்.

இந்த வாக்குமூலத்தில் அட்டாக் பாண்டியை அவரது அக்காள் மகன் திருச்செல்வம் தரப்பை வைத்தே கொலை செய்ய பொட்டு சுரேஷ் திட்டமிட்டிருந்தார் என்றும் இந்த சதி தனது இன்னொரு அக்காள் மகன் விஜயபாண்டி மூலம் அட்டாக் பாண்டிக்கு தெரியவந்ததால் அட்டாக் பாண்டி முந்திவிட்டார் என்றும் கூறப்பட்டது.

மேலும் இந்த கொலை நடப்பதற்கு முன்னர் அழகிரி மீதான அதிருப்தியில், ஸ்டாலின் அணிக்கு அட்டாக் பாண்டி தாவியதாகவும், அதற்காக அவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசியதாகவும் கூறப்படுகிறது. இதை அறிந்த அழகிரியின் மகன் துரை தயாநிதி, அட்டாக் பாண்டியை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கூறப்பட்டது. ஸ்டாலினை நேரில் சந்தித்தபோது அட்டாக் பாண்டி என்ன பேசினார் என்பதற்கு பதில், வரும் விசாரணையில் தெரியவரும் என்றும், இதனால் மு.க.ஸ்டாலினுக்கு நெருக்கடி வரலாம் என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply