தடை விதித்தாலும் தாக்குதல் நிற்காது. டிரம்புக்கு ஐ.எஸ் தீவிரவாதிகள் மிரட்டல்

தடை விதித்தாலும் தாக்குதல் நிற்காது. டிரம்புக்கு ஐ.எஸ் தீவிரவாதிகள் மிரட்டல்

ஏழு முஸ்லீம் நாடுகள் அமெரிக்காவிற்குள் நுழைய விசா மறுக்கப்படும் தடை விதிக்கப்பட்ட போதிலும் தங்களுடைய தாக்குதல் தொடரும் என அமெரிக்க அதிபர் டிரம்புக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் டிரம்ப், ஈராக், சிரியா, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், ஏமன் ஆகிய 7 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு 90 நாட்கள் விசா வழங்க தடை விதித்துள்ளார். இந்த தடைக்கு உலகம் முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் இந்த தடை உத்தரவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஐ.எஸ். தீவிரவாதிகள் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இந்த அறிவிப்பில் டிரம்பின் உத்தரவுகள் எந்தப் பலனையும் தரப்போவது இல்லை, அமெரிக்காவிற்கு வெளியே இருந்து வந்து யாரும் தீவிரவாத தாக்குதல்களை நிகழ்த்தப் போவதில்லை. அமெரிக்காவில் பிறந்த, அமெரிக்காவை பூர்வீகமாக கொண்ட அமெரிக்கர்களை கொண்டு தான் அமெரிக்காவை தாக்குவோம்.

அமெரிக்காவுக்குள் வருவதற்கு முஸ்லீம்களுக்கு தடை விதித்து விட்டு, ஈராக், சிரியா மற்றும் ஏமன் நாடுகளில், டிரம்ப் முஸ்லீம்களை கொன்று குவித்து வருகிறார். இது ஐ.எஸ் இயக்கத்தினருக்கு மறைமுகமான சேவை என்பது டிரம்புக்கு தெரியாது. அவரை எதிர்த்து இப்போதே மக்கள் வீதிக்கு வர தொடங்கிவிட்டனர். கடவுளின் விருப்பப்படி அமெரிக்காவை அவர் கீழ் நோக்கி இழுத்துச் செல்வார் என்பதில் சந்தேகமில்லை” என்று அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Leave a Reply