சோமாலியா நாட்டின் முக்கிய தீவிரவாதியை தீர்த்து கட்டிய அமெரிக்க ராணுவம்.
ஈராக் மற்றும் சிரியா நாடுகளில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வரும் அல்கொய்தாவின் இன்னொரு பிரிவான அல்-ஷபாப் என்ற பயங்கரவாதியை தீர்த்து கட்ட கடந்த சில நாட்களாக அமெரிக்க ராணுவம் தீவிரம் காட்டி வந்த நிலையில் தற்போது அவர் ஒரு விமான தாக்குதலில் கொல்லப்பட்டதாக பெண்டகன் உறுதி செய்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் செய்தித் தொடர்பாளர் பீட்டர் குக் நேற்று செய்தியாளர்களிடம் கூறியபோது, “அல்-ஷபாப் பயங்கரவாத அமைப்பின் முக்கியத் தலைவரான ஹஸன் அலி தூரே, சோமாலியாவில் நடைபெற்ற விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டார் என்பதை பாதுகாப்பு அமைச்சகம் உறுதி செய்கிறது. சோமாலியாவில் நடத்தப்பட்ட பல்வேறு பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு அவர் சதித் திட்டம் தீட்டினார். அவரால் திட்டமிடப்பட்ட தாக்குதல்கள், 3 அமெரிக்கர்களின் உயிரிழப்புக்குக் காரணமாக இருந்தன’ என்று கூறினார்.
சோமாலியாவில் அமெரிக்கா நிகழ்த்திய விமானத் தாக்குதலில் 150-க்கும் மேற்பட்ட அல்-ஷபாப் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் கடந்த ஒரு மாதத்தில், அந்த அமைப்பின் முக்கியத் தலைவர் கொல்லப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.