50 மணி நேரம் தொடர்ச்சியாக முத்தமிட்ட பெண்ணுக்கு சொகுசு கார் பரிசு

50 மணி நேரம் தொடர்ச்சியாக முத்தமிட்ட பெண்ணுக்கு சொகுசு கார் பரிசு

முத்தம் என்பது அன்பின் வெளிப்பாடாக உலகம் முழுவதும் கருதப்பட்டு வரும் நிலையில் இந்த முத்தத்தை வைத்து போட்டி ஒன்று அமெரிக்காவில் உள்ள வானொலி நிலையம் ஒன்றும் கியா என்ற கார் நிறுவனமும் இணைந்து நடத்தியது.

போட்டியின் விதிமுறைப்படி கியா நிறுவனத்தின் புதிய மாடல் காரான கியா ஆப்டிமா என்ற காரை நீண்ட நேரம் வாயை எடுக்காமல் முத்தமிட வேண்டும். யார் அதிக நேரம் முத்தமிடுகிறார்களோ அவர்களுக்கு அந்த கார் சொந்தம்.

இந்த போட்டியில் ஏராளமானோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இருப்பினும் ஏழுபேர் தொடர்ச்சியாக 50 மணி நேரம் முத்தமிட்டு போட்டியில் வெற்றி பெற்றனர். இருப்பினும் ஒருவருக்கு மட்டுமே கார் பரிசு என்பதால் கார் பெறும் அதிர்ஷ்டசாலி குலுக்கல் மூலம் தேர்வு செய்யப்பட்டார். ஆஸ்டின் நகரைச் சேர்ந்த டிலினி ஜெயசூர்யா என்ற பெண் தான் அந்த அதிர்ஷ்டசாலி. வெற்றி பெற்ற டிலினி காரை மகிழ்ச்சியுடன் ஓட்டி சென்றதை மற்ற ஆறு பேரும் ஏக்கத்துடன் பார்த்தனர்.

Leave a Reply