ஆஸ்திரேலியாவில் இன்று நடைபெற்ற ஒரு கிரிக்கெட் போட்டியில் டெஸ்ட் பேட்ஸ்மேன் Phil Hughe மீது பவுன்சர் பந்து ஒன்று தலையில் பட்டு ஏற்பட்ட காயம் காரணமாக அவர் கோமா நிலையில் இருப்பதாகவும், அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடி வருவதாகவும் செய்திகள் கூறுகின்றன.
இன்று காலை சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஒரு போட்டியில் New South Wales அணியின் பந்துவீச்சாளர் Sean Abbott போட்ட பவுன்சர் ஒன்று Phil Hughe தலையை பதம் பார்த்தது. பந்து தலையில் பட்ட வேகத்தில் Phil Hughe சுருண்டு தரையில் விழுந்தார்.
உடனடியாக அவர் சிட்னியில் உள்ள St Vincent’s Hospital என்ற மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்து அவர் கோமா நிலைக்கு சென்றுவிட்டதாகவும், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், இன்னும் 48 மணி நேரத்தில் அவருக்கு தலையில் சர்ஜரி செய்யவேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
25 வயதான Phil Hughe தலையில் அடிபட்டு சுருண்டு விழுந்ததை அவருடைய தங்கையும் தாயாரும் நேரடியாக மைதானத்தில் இருந்து பார்த்துக்கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”http://bit.ly/1xSrusP” standard=”http://www.youtube.com/v/v_TlmvCorMs?fs=1″ vars=”ytid=v_TlmvCorMs&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=¬es=” id=”ep6022″ /]