உலகக்கோப்பை டி-20 கிரிக்கெட் போட்டி: வங்கதேசத்தை போராடி வீழ்த்தியது ஆஸ்திரேலியா
உலகக்கோப்பை டி-20 கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்றைய ஆட்டத்தில் வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா அணி கடைசி நேரத்தில் தட்டு தடுமாறி வெற்றி பெற்றது.
பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற்ற நேற்றைய போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 156 ரன்கள் எடுத்தது.
157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 18.3 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 157 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.ஆஸ்திரேலிய விக்கெட்டுக்கள் ஒரு கட்டத்தில் தொடர்ந்து சரிந்து வந்ததால் இந்த போட்டி பரபரப்புடன் காணப்பட்டது. மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்திய ஆஸ்திரேலியாவின் ஜாம்பா ஆட்ட நாயகன் விருதினை பெற்றார்.
இன்று பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.