அமெரிக்காவை அடுத்து ஆஸ்திரேலியாவிலும் இனவெறி. மெல்போர்னில் இந்திய மதபோதகர் மீது தாக்குதல்

அமெரிக்காவை அடுத்து ஆஸ்திரேலியாவிலும் இனவெறி. மெல்போர்னில் இந்திய மதபோதகர் மீது தாக்குதல்

சமீபத்தில் அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதில் இருந்து இந்தியர்கள், சீனர்கள் உள்பட வெளிநாட்டினர் மீது இனவெறி தாக்குதல் நடந்து வருகிறது. இந்நிலையில் தற்போது அது ஆஸ்திரேலியா வரை பரந்து விரிந்துள்ளது. மனித நேயமின்றி நடந்து வரும் இனவெறி தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

ஆஸ்திரேலிய நாட்டின் மெல்போர்ன் நகரில் இந்தியாவைச் சேர்ந்த கிறிஸ்துவ மத போதகர் மேத்யூ. இவரை நேற்று அடையாளம் தெரியாத சில நபர்கள் கிறிஸ்துவ தேவாலத்திற்குள் கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

கத்தியால் கழுத்தில் தாக்கப்பட்டதால் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சைக்குப் பின் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். மதபோதகர் மேத்யூவைத் தாக்கிய நபர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும், முதல்கட்ட விசாரணையில் தாக்கிய நபர் பவுக்னர் என்றும் அவரது மனநிலை குறித்து சோதனை செய்யப்படவுள்ளது என்றும் ஆஸ்திரேலியா காவல்துறையினர் கூறி வருகின்றனர்.

Leave a Reply