இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளுக்கு இடையே கடந்த 9ஆம் தேதி முதல் நடந்து வரும் முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் நான்காவது நாளான இன்று இந்திய அணி 444 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.
அதன்பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை ஆஸ்திரேலிய அணி ஆட்டநேரம் முடியும் நேரத்தில் 5 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 290 ரன்கள் எடுத்துள்ளது. இரண்டாவது இன்னிங்ஸிலும் வார்னர் சதமடித்துள்ளார். ஸ்மித் 52 ரன்களுடனும், ஹாடின் 40 ரன்களுடனும் ஆடிக்கொண்டிருக்கின்றனர்.
ஒருநாள் மட்டுமே மீதியுள்ள நிலையில் இந்திய அணிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தற்போது ஆஸ்திரேலிய அணி 363 ரன்கள் முன்னிலையில் இருக்கின்றது. நாளை கடைசி நாளில் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.