காலில் அம்மன் பட டாட்டூ. ஆஸ்திரேலிய இளைஞருக்கு நேர்ந்த அதிர்ச்சி அனுபவம்
ஆஸ்திரேலிய இளைஞர் ஒருவர் காலில் அம்மன் பட டாட்டூ வரைந்ததால் ஆத்திரமடைந்த பெங்களூர் இளைஞர்கள் சிலர் அவருடைய காலை அறுத்து டாட்டூவை அழிக்க வேண்டும் என்று கூறியதால் ஆஸ்திரேலிய இளைஞர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்பர்ன் நகரை சேர்ந்த மேத்யூ கார்டன் அவர்களும் அவரது தோழி எமிலியும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெங்களூருவுக்கு சுற்றுலா வந்திருந்தனர். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அங்குள்ள உணவகம் ஒன்றில் உணவு அருந்தி கொண்டிருந்தபோது, அப்போது அவரது காலில் இந்து பெண் தெய்வமான அம்மன் உருவம் டாட்டூவாக வரையப்பட்டிருந்ததை பார்த்து பலர் அதிர்ச்சி அடைந்தனர். உடனே ஹோட்டலில் உணவருந்தி கொண்டிருந்தவர்கள் சிலர் வேறு சிலருக்கு தகவல் அளித்ததால், அந்த ஹோட்டலின் முன் ஏராளமானோர் கூடி விட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் உடனே காவல்துறையினர் வந்து நிலைமையை கட்டுப்படுத்தினர். காலில் உள்ள டாட்டு இந்த மதத்தின் கடவுள் என மேத்யூ கார்டனுக்கு புரிய வைத்து அந்த கும்பலிடம் மன்னிப்பு கேட்குமாறு அறிவுரை கூறினர். இதையடுத்து மேத்யூ கார்டன் காவல் நிலையம் அழைத்து சென்று மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்தார்.
இச்சம்பவம் குறித்து கார்டன் கூறுகையில் ” என் தோலை அறுத்தெடுத்து டாட்டூவை அழிக்கப்போவதாக என்னை அவர்கள் அச்சுறுத்தினர். ஒரு நிமிடம் அதிர்ச்சியில் அப்படியே உறைந்து போய் விட்டேன். பின்னர் போலீசார் எனக்கு இந்து மதம் குறித்து அவர் எனக்கு அறிவுரை வழங்கினர். இந்த கசப்பான அனுபவத்தால் விரைவில் பெங்களூருவில் இருந்து வெளியேற வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது”