சாம்பியன்ஷிப் கிரிக்கெட்: வங்கதேசத்திற்கு கிடைத்த அதிர்ஷ்ட புள்ளி

சாம்பியன்ஷிப் கிரிக்கெட்: வங்கதேசத்திற்கு கிடைத்த அதிர்ஷ்ட புள்ளி

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற வங்கதேசம் – ஆஸ்திரேலியா அணிகள் மோதிய ஆட்டம் மழை காரணமாக பாதியில் ரத்து செய்யப்பட்டதால்ல் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் கொடுக்கப்பட்டது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட் செய்து 182 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 183 ரன்கள் என்ற எளிதான இலக்கை விரட்டிய ஆஸ்திரேலியாவுக்கு மழை வடிவில் வில்லன் வந்தது. இதனால் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கான இலக்கு 89 ரன்களாக குறைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த இலக்கை அடையக்கூட மழை வழிவகுக்கவில்லை.

இன்னும் குறைந்தது 4 ஓவர்கள் விளையாடினால், போட்டிக்கு டக்வொர்த் லீவிஸ் முறையில் முடிவு கிடைக்கும் என்ற நிலையில் இரு அணியினரும் மழை படுத்தும் பாடினால் கடுப்பாகியுள்ளனர். ட்க்வொர்த் லீவிஸ் முறையிலும் ஆஸ்திரேலிய அணிக்கே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கெனவே, ஆஸ்திரேலிய அணியின் நியூசிலாந்துக்கு எதிரான முதல் லீக் போட்டிக்கு மழையால் முடிவில்லாமல் போனது. இந்த போட்டிக்கும் முடிவு இல்லை என்றால் அந்த அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதில் சிக்கல் ஏற்படும்.

Leave a Reply