ஆஸ்திரேலிய பாராளுமன்றம் திடீர் கலைப்பு. ஜூலை 2-ல் தேர்தல்
ஆஸ்திரேலியா பாராளுமன்றம் முறைப்படி கலைக்கப்பட்டதாக அந்நாட்டு பிரதமர் மால்கம் டர்ன்புல் இன்று அறிவித்துள்ளார். ஆஸ்திரேலிய பாரளுமன்றத்திற்கு வரும் ஜூலை 2ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமராக இருந்த டோன் அபாட் உள்கட்சி விவகாரம் மற்றும் சதி காரணமாக பதவி விலகியதை அடுத்து மால்கம் டர்ன்புல் புதிய பிரதமராக பதவியேற்றார்.
ஆஸ்திரேலியாவின் முக்கிய ஏற்றுமதியான இரும்பு மற்றும் நிலக்கரி விலையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளதால் அந்நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து நெருக்கடியான சூழ்நிலை நிலவி வருகிறது. எனவே ஆஸ்திரேலிய பாராளுமன்றம் முன்னதாக கலைக்கப்பட்டு தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்த தேர்தலில் மால்கம் டர்ன்புல் தலைமையிலான மத்திய-வலதுசாரி கொள்கைகளை உடைய லிபரல் கட்சி மீண்டும் ஆட்சி பிடிக்கும் என கருத்துக்கணிப்புகள் கூறி வருகின்றன.