பெண்கள் அணியும் பிராவில் ரூ.5000 கோடி போதைப்பொருள் கடத்தல்
பெண்கள் அணியும் பிராக்கள் தற்போது புதுப்புது வடிவில் வெளிவந்து கொண்டிருக்கின்றது. பஞ்சு நிரப்பப்பட்ட பிராக்கள் மற்றும் திரவம் நிரப்பப்பட்ட பிராக்கள் தற்போது உலகம் முழுவதும் டிரெண்ட் ஆகி வருகிறது.
இந்நிலையில் பிராவில் உள்ள பஞ்சு மற்றும் திரவத்திற்கு பதிலாக போதைப்பொருட்களை சீனாவில் உள்ள ஒருசிலர் கடத்துவதாக ஆஸ்திரேலிய நாட்டு சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இந்நிலையில் ஹாங்காங் நகரில் இருந்து சீனாவுக்கு வந்த கப்பலை சோதனை செய்த ஆஸ்திரேலியா அதிகாரிகள் ஒரு கண்டெய்னரில் இருந்த பிரா முழுவதிலும் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர். இவற்றி மதிப்பு ஆஸ்திரேலியாவின் 100 கோடி டாலருக்கு சமம் என்பது தெரியவந்துள்ளது.
இந்திய கரன்சி மதிப்புக்கு சுமார் 4878 கோடி ரூபாய் என கூறப்படுகிறது. ஆஸ்திரேலியா நாட்டின் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு வரலாற்றில் இவ்வளவு பெரிய அளவில் போதைப்பொருள் சிக்கியது இதுவே முதன்முறை என்றும் கூறப்படுகிறது.
https://www.youtube.com/watch?v=d_adP2EXHCo
Chennai Today News: Australia seizes methamphetamine smuggled in bra inserts