மலேசிய விமானம் MH370 இந்திய பெருங்கடலில் இருப்பது உறுதிப்படுத்தப்படுத்தப்பட்டாலும், விமானத்தையோ அல்லது விமானத்தின் பிற பொருட்களையோ மீட்க முடியாது என ஆஸ்திரேலியா கைவிட்டுவிட்டது.
மலேசிய விமானம், பெர்த் நகரில் இருந்து 1500 கி.மீ தூரத்தில் உள்ள இந்திய பெருங்கடலில் விழுந்ததாக கூறப்பட்டு வருகிறது. அதன் அருகே கருப்புப்பெட்டியின் சிக்னல் கிடைத்ததாகவும் கூறப்பட்டது. இதை ஆஸ்திரேலிய பிரதமரும் உறுதி செய்தார். தொடர்ந்து கருப்புப்பெட்டியின் சிக்னல் கிடைத்துக்கொண்டிருந்தாலும், விமானம் கடலில் 15000 அடி ஆழத்தில் இருப்பதாக ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
1914ஆம் ஆண்டு கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பல் இன்னும் மீட்கப்படவில்லை. ஏனெனில் டைட்டானிக் கப்பல் தற்போது 12000 அடி ஆழத்தில் கடலினுள் உள்ளது.அவ்வளவு ஆழத்தில் செல்லக்கூடிய அதிநவீன நீர்மூழ்கிக்கப்பல் இன்னும் உலகின் எந்த நாட்டிலும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நிலையில் 15000 அடி ஆழத்திற்கு சென்று மலேசிய விமானத்தின் பாகங்களையோ அல்லது கருப்புப்பெட்டியையோ மீட்கக்கூடிய வாய்ப்பு இல்லை என்று ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. எனவே மலேசிய விமானத்தை தேடும் பணியை ஆஸ்திரேலியா நிறுத்திக்கொள்வதாகவும் கூறிவிட்டது.
ஆனால் மாயமான விமானம் ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு கடத்தப்பட்டதாகவும், பயணிகள் அனைவரும் உயிருடன் சிறையில் இருக்கின்றார்கள் என்றும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருப்பதால்தான், ஆஸ்திரேலியா தனது தேடுதல் வேட்டையை நிறுத்திக்கொண்டதாக ஆஸ்திரேலிய பத்திரிகைகள் கருத்து தெரிவித்துள்ளன. எது எப்படியோ மலேசிய விமானத்தின் மர்மம் நீடித்துக்கொண்டே இருக்கிறது.