இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளான இன்று முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 408 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதன்பின்னர் முதல் இன்னிங்ஸில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் எடுத்துள்ளது.
முன்னதாக இந்திய அணியில் முரளி விஜய் 144 ரன்களும், ரஹானே 81 ரன்களும், அஸ்வின் 35 ரன்களூம், கேப்டன் தோனி 33 ரன்களும், ரோஹித் சர்மா 32 ரன்களும் எடுத்துள்ளனர். ஆஸ்திரேலிய அணியில் ரோஜர்ஸ் 55 ரன்களும், ஸ்மித் ஆட்டமிழக்காமல் 65 ரன்களும் எடுத்துள்ளனர்.
இந்திய அணி தரப்பில் யாதவ் மிக அபாரமாக பந்துவீசி 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.