இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுக்கள் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் ஆஸ்திரேலியா அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வருகிறது.
முன்னதாக இந்திய அணி தனது சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் இரண்டாவது இன்னிங்ஸில் 224 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் வெற்றிக்கு 128 ரன்களே தேவை என்ற எளிய இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய ஆஸ்திரேலிய அணி 23.1 ஓவர்களில் 130 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
ஸ்கோர் விபரம்”:
இந்தியா முதல் இன்னிங்ஸ்: 408/10 109.4 ஓவர்கள்
முரளிவிஜய் 144
ரஹானே 88
ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸ் 505/10 109.4 ஓவர்கள்
ஸ்மித் 133
ஜான்சன் 88
ரோஜர்ஸ் 55
இந்தியா 2வது இன்னிங்ஸ்: 224/10 64.3 ஓவர்கள்
தவான் 81
யாதவ் 30
ஆஸ்திரேலியா 2வது இன்னிங்ஸ் 13/4 23.1 ஓவர்கள்
ரோஜர்ஸ் 55
ஸ்மித் 28