இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி. 48 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி.

cricketஇந்தியா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளுக்கு இடையே நடைபெற்ற முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. விராத் கோஹ்லி தலைமையேற்ற முதல் போட்டியே இந்தியாவுக்கு தோல்வியில் முடிந்ததால்  கிரிக்கெட் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

கடந்த 9ஆம் தேதி ஆரம்பமான இந்த டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 517 ரன்களும், இரண்டாவது இன்னிங்சில் 290 ரன்களும் எடுத்து டிக்ளேர் செய்தது. முதல் இன்னிங்ஸில் 444 ரன்கள் எடுத்து பதிலடி கொடுத்த இந்திய அணி வெற்றி பெற 363 ரன்கள் இலக்கு என்றிருந்த நிலையில் 315 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து பரிதாபமாக தோல்வி அடைந்தது.

இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலியாவின் லியான் அபாரமாக பந்துவீசி 7 விக்கெட்டுக்களை சாய்த்து தனது அணிக்கு வெற்றியை உறுதி செய்தார். இவர் ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்கோர் போர்டு:

ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸ்: 517/7

வார்னர் 145
கிளார்க் 128
ஸ்மித் 162

இந்தியா முதல் இன்னிங்ஸ்: 444/10

விராத் கோஹ்லி 115
புஜாரா 73
ரஹானே62

ஆஸ்திரேலியா 2வது இன்னிங்ஸ்: 290/5

வார்னர் 102
ஸ்மித் 52
மார்ஷ் 40

இந்தியா 2வது இன்னிங்ஸ்

விராத் கோஹ்லி 141
முரளிவிஜய் 99
புஜாரா 21

Leave a Reply