நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி. ஆஸ்திரேலியா அபார வெற்றி
ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்கு இடையே நடைபெற்ற 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
131 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று நேற்றைய 4ஆம் நாள் ஆட்டத்தை முடித்த ஆஸ்திரேலிய அணி இன்று தொடர்ந்து 5வது நாள் ஆட்டத்தை விளையாடியது.
அந்த அணி 54 ஓவரில் 3 விக்கெட்டுக்களை மட்டும் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக ஆஸ்திரேலியாவின் பர்ன்ஸ் தேர்வு செய்யப்பட்டார்.
ஸ்கோர் விபரம்:
நியூசிலாந்து முதல் இன்னிங்ஸ் – 370/10 65.4 ஓவர்கள்
ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸ் – 505/10 153.1 ஓவர்கள்
நியூசிலாந்து 2வது இன்னிங்ஸ் – 335/10 111.1 ஓவர்கள்
ஆஸ்திரேலியா 2வது இன்னிங்ஸ் – 201/3 54 ஓவர்கள்