இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி. ஆஸ்திரேலியா 354/5

Australia v India - 1st Test: Day 1இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான் முதல் கிரிக்கெட் டெஸ்ட் அடிலெய்ட் நகரில் இன்று தொடங்கியுள்ளது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன், முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார்.

ஆஸ்திரேலியா அணி சற்று முன்னர் வரை முதல் இன்னிங்சில் 88.4 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 254 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் கிளார்க் 60 ரன்கள் எடுத்திருந்தபோது காயம் காரணமாக வெளியேறினார்.

வார்னர் இன்று அபாரமாக பேட்டிங் செய்தார். அவர் 253 பந்துகளில் 145 ரன்கள் குவித்துள்ளார். மேலும் ஸ்மித் 72 ரனகளுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

இந்திய அணி தரப்பில் ஆரோன் 2 விக்கெட்டுக்களையும், ஷமி, இஷாந்த் சர்மா மற்றும் கே.வி.ஷர்மா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.

Leave a Reply