உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: டாஸ் வென்று பேட்டிங் செய்கிறது ஆஸ்திரேலியா.

Cricket WCup Australia Indiaஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இன்று இந்திய ஆஸ்திரேலிய அணிகள் விறுவிறுப்பாக மோதி வருகின்றன. இந்த போட்டி ஆஸ்திரேலியாவின் சிட்னி மைதானத்தில் நடந்து வருகிறது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய ஆஸ்திரேலிய அணி கேப்டன் மைக்கேல் கிளார்க் தீர்மானித்தார். பின்ச் மற்றும் வார்னர் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கிய நிலையில் ஆட்டத்தின் நான்காவது ஓவரில் வார்னர் 12 ரன்கள் எடுத்த நிலையில் விராத் கோஹ்லியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

ஆஸ்திரேலிய அணி சற்று முன்வரை 11 ஓவர்களில் 57 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்துள்ளது. பின்ச் 12 ரன்களுடனும், ஸ்மித் 30 ரன்களுடனும் ஆடி வருகின்றனர்.

Leave a Reply