மோடியின் நண்பர் நிலக்கரி சுரங்கத்திற்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் நிபந்தனை.

மோடியின் நண்பர் நிலக்கரி சுரங்கத்திற்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் நிபந்தனை.
australia
பிரதமர் நரேந்திர மோடியின் நெருக்கமான நண்பர் என்று கூறப்படும் கவுதம் அதானியின் நிறுவனமான அதானி குழுமம் சமீபத்தில் ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் ரூ.1400 கோடி செலவில் 200 மெகாவாட் சூரிய மின் உற்பத்தி நிலையம் அமைக்க தமிழக அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளது என்பது அனைவரும் தெரிந்ததே. இந்நிலையில் இதே நிறுவனம் ஆஸ்திரேலியாவில் 16.5 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் நிலக்கரி சுரங்கம் அமைக்க திட்டமிட்டது. ஆனால் இந்த திட்டத்திற்கு அந்நாட்டு நீதிமன்றம் சில நிபந்தனைகளை விதித்து இந்த நிபந்தனைகள ஏற்றுக்கொண்டால் மட்டுமே இந்த திட்டத்தை சுரங்கம் அமைக்க அனுமதி வழங்கப்படும் என உத்தரவிட்டுள்ளது.

அதானி குழுமம் சுமார் 16.5 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் ஆஸ்திரேலியாவில் அமைக்கவுள்ள நிலக்கரி சுரங்கம் செயல்பாட்டுக்கு வந்தால், நிலத்தடி நீர், பலவகை உயிர்கள் மற்றும் சில பறவைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறி அங்குள்ள சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு பிரிஸ்பேன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது

இந்த மனுவை விசாரித்த பிரிஸ்பேன் லேண்ட் நீதிமன்ற தலைவர், மனுவை தளளுபடி செய்தார். ஆனால் அதே நேரத்தில் சில அரிய வகையான பறவைகளை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் உள்பட சில நிபந்தனைகளுடன் அதானி நிறுவனத்திற்கு நிலக்கரி சுரங்க அனுமதி வழங்கும்படி மாகாண சுற்றுச்சூழல் துறை அமைச்சருக்கு பரிந்துரை செய்துள்ளார். இந்த நிபந்தனைகளை நிறுவனம் ஒப்புக்கொண்டால், சுரங்கம் அமைக்க தடையில்லை என்றும் அவர் தன்னுடைய தீர்ப்பில் கூறியுள்ளார்.

English Summary: Australian court tosses out Adani coal mine challenge

Leave a Reply