‘கபாலி’ படம் பார்த்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ திரைப்படம் வெளியாகி மூன்று வாரங்கள் ஆகிய பின்னரும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிவருகிறது. சிறுவர், முதல் பெரியவர்கள் வரை குடும்பம் குடும்பமாக இந்த படத்தை பார்க்க வருவதாக திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் உலகப்புகழ் பெற்ற பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஹெய்டன் நேற்று சென்னையில் ‘கபாலி’ படத்தை பார்த்துள்ளார்.
தமிழ்நாடு பிரிமியர் லீக் போட்டியை பிரபலப்படுத்த சமீபத்தில் தமிழகம் வந்த ஹெய்டன், மதுரையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு, மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றிப்பார்த்தார். பின்னர் ஆஸ்திரேலியா திரும்புவதற்காக சென்னை வந்த ஹெய்டன் நேற்று மாலை ஆல்பர்ட் திரையரங்கில் ‘கபாலி’ படத்தை ரசித்து பார்த்தார். ரஜினியின் சூப்பர் நடிப்பு தன்னை வெகுவாக கவர்ந்ததாகவும், கபாலி’ டீமுக்கு வாழ்த்துக்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இன்று அவர் ஆஸ்திரேலியாவுக்கு கிளம்பும்போது தனது டுவிட்டரில் நன்றி தெரிவித்தார். மீண்டும் தமிழக மக்களை சந்திக்க விரைவில் வரவுள்ள்தாகவும் தமிழக பிரிமியர் லீக்கில் தெறிக்க விடலாம்’ என்றும் அவர் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.