டிசம்பர் 25ஆம் தேதி உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் திருவிழாவை கொண்டாட முழு வீச்சுடன் ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில் ஆஸ்திரேலியாவில் நாட்டில் கிறிஸ்துமஸ் திருவிழாவுக்கு மிக அதிகளவில் வண்ண மின் விளக்கு தோரணங்கள் அமைத்து கின்னஸ் சாதனை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள கான்பெர்ரா என்ற நகரில் உள்ள வழக்கறிஞர் டேவிட் ரிச்சர்ட் என்பவர் சுமார் 10 லட்சத்து 20 ஆயிரம் வண்ண மின் விளக்குகளால் ஆன தோரணங்கள் செய்து கின்னஸ் சாதனை புரிந்துள்ளார். தனியார் மின் நிறுவனம் ஒன்று இந்த சாதனை புரிவதற்காக இலவசமாக மின்சாரம் கொடுத்து உதவி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.. உள்ளூர் தன்னார்வ தொண்டர்களின் உதவியுடன் வணிக வளாகம் உள்ள பகுதி முழுவதுமே வண்ண மின் விளக்குகளால் தற்போது ஜொலித்து வருகிறது.
இதற்கு முன்பு சுமார் 5 லட்சம் வண்ண மின் விளக்குகள் ஒரே நேரத்தில் ஏற்றப்பட்டதுதான் சாதனையாக இருந்தது. இந்த சாதனையும் இதே நகரில் கடந்த 2013ஆம் ஆண்டு கான்பெர்ரா நிகழ்த்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.