ஆஸ்திரேலிய பாராளுமன்ற தேர்தல். இழுபறி முடிவால் லிபரல் கட்சி அதிர்ச்சி
ஆஸ்திரேலியா நாட்டில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது பிரதமர் மால்கம்டர்ன்புல் ஆஸ்திரேலியாவில் பொருளாதார சீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள இருப்பதாக வாக்குறுதி அளித்தார். இதற்கு மக்களிடம் பெரும் ஆதரவு இருந்ததால் இக்கட்சி தனி மெஜாரிட்டியுடன் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் நேற்று பாராளுமன்ற தேர்தல் முடிந்தவுடன் மாலையில் எண்ணப்பட்ட ஓட்டில் முடிவு இழுபறியாக வந்துள்ளது. ஆளும் லிபரல் கூட்டணி 69 இடங்களிலும், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி 70 இடங்களிலும், கிரீன்ஸ் கட்சி மற்றும் சுயேச்சைகள் தலா 5 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இன்னும் 16 தொகுதிகளின் முடிவுகள் மட்டுமே வரவேண்டியவுள்ள நிலையில் எந்த கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்காது என தெரிகிறது. இந்த இழுபறியில் முடிவால் லிபரல் கட்சி அதிர்ச்சி அடைந்துள்ளது.
இப்போதைய முடிவை வைத்து பார்க்கும்போது ஆஸ்திரேலியாவில் கூட்டணி ஆட்சி அமையும் என்று கருதப்படுகிறது. இது லிபரல் கட்சியினரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
Australian election result in no majority party raising