ஆஸ்திரேலியாவில் உள்ள இஸ்லாமியக் கல்லூரி ஒன்றில் பெண்கள் ஓட்டப் பந்தயத்தில் கலந்துகொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் உள்ள பெண்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பெண்கள் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டால் கன்னித்தன்மை அழிந்துவிடும் என கல்லூரியின் தலைமை ஆசிரியர் கருதியதால் இந்த தடை விதிக்கப்பட்டதாக கல்லூரி நிர்வாகம் கூறியுள்ளது. இந்த வித்தியாசமான தடைக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளதால் இதுகுறித்து விசாரணை நடத்த ஆஸ்திரேலிய ஒழுங்குமுறை ஆணையம் முடிவு செய்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் உள்ள துருகானியா என்ற நகரம் அருகில் உள்ள அல் – தக்வா என்ற கல்லூரியில் சமீபத்தில் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. இந்த ஓட்டப் பந்தயங்களில் மாணவிகள் கலந்துகொள்ள அதன் தலைமை ஆசிரியை தடை விதித்ததாக கல்வித் துறைக்கு அந்தக் கல்லூரியில் பணியாற்றிய முன்னாள் ஆசிரியை புகார் அனுப்பியிருந்தார்.
கல்லுரியில் பெண்கள் மீது பாரபட்சம் காட்டப்படுவதாகவும் அவர்கள் ஓட்டப் பந்தயங்களில் கலந்து கொண்டால் அவர்களது கன்னித்தன்மை பாதிக்கப்படும் என்றும் மேலும் கால்பந்தாட்டங்களை விளையாடினால், கால்களில் அதிகம் அடிபடும் என்பதனை காரணமாகக் கூறி விளையாட தடை விதிக்கப்பட்டிருப்பதாக அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டது. இந்த புகாரை உடனடியாக பதிவு செய்த ஆஸ்திரேலிய கல்வித்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.