ஆஸ்திரேலிய பல்கலைக்கழகம் வழங்கும் உதவித்தொகை

download (4)

ஆஸ்திரேலியாவிலுள்ள மேற்கு ஆஸ்திரேலிய பல்கலைக்கழகம் அதன் தரமான ஆய்வுப் படிப்புகளுக்காக புகழ் பெற்றது. இது மேற்கு ஆஸ்திரேலியாவில் கல்வி அனுபவம் பெற விரும்பும் இந்திய மாணவர்கள் 50 பேருக்கு கட்டண விலக்குடன் கூடிய ஸ்காலர்ஷிப்களை அறிவித்துள்ளது.

நமது மத்திய அரசு, பல்கலைக்கழகம், பணி வழங்குபவர், அங்கீகரிக்கப்பட்ட ஏதாவதொரு நிறுவனம் இவற்றில் ஒன்றிலிருந்து ஆஸ்திரேலிய கல்வியின் போது நமது வாழ்வாதாரத்திற்கான உறுதி பெற்றுள்ள மாணவர்கள் மேற்கு ஆஸ்திரேலிய பல்கலைக்கழகத்தின் உயர் பட்ட ஆய்வுப் படிப்புக்கான உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.

கட்டண விலக்குக்கான உதவித் தொகையில் கல்விக் கட்டணம் மற்றும் வெளிநாட்டு மாணவருக்கான மருத்துவ இன்சூரன்ஸ் போன்றவையும் அடங்கும். ஆஸ்திரேலியாவில் வாழ்வதற்குத் தேவையான வாழ்வாதாரத் தொகை போக மீதம் தேவைப்படும் உதவியை பல்கலைக்கழகம் தந்திடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய கல்விக்கான வாழ்வாதார உத்தரவாதம், ஆங்கில மொழித் திறன், ஆஸ்திரேலியாவில் மேற்படிப்புக்குத் தேவைப்படும் 4 ஆண்டு பட்டப்படிப்பு ஆகியவற்றைப் பெற்றிருப்பவர் இந்த உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.

மேலும் தகவல்களுக்கு பல்கலைகழகத்தின் www.uwa.edu.au என்ற இணையதளத்தை காணவும்.

Leave a Reply