ஆஸ்திரியா நாட்டு கோடீஸ்வரர் ரிச்சர்ட் என்பவர் தன்னை விட ஐம்பது வயதுக்கும் குறைவான தொலைக்காட்சி வர்ணனையாளர் ஒருவரை திருமணம் செய்து கொண்ட செய்தியை சமீபத்தில் பார்த்தோம். தற்போது ரிச்சர்ட் அவர்களுக்கு புதிய மனைவியாக வந்த கேத்தி, கோடீஸ்வரரின் கோடிக்கணக்கான சொத்துக்கள் மற்றும் தொழில்களை கைப்பற்றியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.\\
82 வயதான தொழிலதிபர் ரிச்சர்ட் அவர்களுக்கு ஆஸ்திரியா மட்டுமின்றி உலகமெங்கும் பல தொழில்கள் நடைபெற்று வருகின்றன. மேலும் கோடிக்கணக்கான அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் இவரது பெயரில் உள்ளது. இந்நிலையில் இவர் ஐந்தாவது திருமணம் செய்து கொண்ட கேத்தி, தற்போது அவருடைய தொழில் மற்றும் சொத்துக்களை கைப்பற்றியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
இதனால் கடும் ஆத்திரமும் அதிர்ச்சியும் அடைந்த ரிச்சர்ட் அவர்களில் 21 வயது மகள் ஜாக்கி வீட்டை விட்டு வெளியேறியதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. ஆனால் இந்த செய்தியை ரிச்சர்ட் மறுத்துள்ளார். தனது மகள் ஜாக்கி மட்டுமே தனது உண்மையான வாரிசு என்றும், அவர் தற்போது வெளிநாட்டு சுற்றுப்பயணம் செய்துள்ளதால் தற்காலிகமாக எனது புதிய மனைவி கேத்தி நிர்வாகம் செய்வதாகவும் கூறியுள்ளார்.