சென்னை அயனாபுரம் மாணவர்கள் உயிரிழப்பிற்கு யார் காரணம்?
சென்னை அயனாபுரத்தில் இரண்டு மாணவர்கள் பைக் ஒட்டி வந்தபோது போலீஸ் வாகனம் மோதி மரணம் அடைந்த விபத்தில் இரண்டு மாணவர்களும் பரிதாபமாக உயிரிழந்தனர். 10ஆம் வகுப்பு முடித்துவிட்டு 11ஆம் வகுப்புக்கு செல்லவிருக்கும் இந்த மாணவர்களின் முடிவு உண்மையில் சோகமானது என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ஆனால் அதே நேரத்தில் அந்த பகுதி மக்களின் குற்றச்சாட்டு, போராட்டம் மற்றும் இறந்த மாணவர்கள் பெற்றோர்களிடம் உள்ள தவறை எந்த ஊடகமும் சுட்டிக்காட்டி தயங்குகிறது.
15 வயது மாணவனுக்கு முதலில் வண்டியோட்டும் உரிமையே கிடையாது. 18 வயது முடிந்தால்தான் லைசென்ஸ் கிடைக்கும். பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு பைக் வாங்கி கொடுத்தது பெற்றோர்களில் பொறுப்பில்லாத செயல். இன்சூரன்ஸ் உள்பட எந்தவிதமான சலுகையும் கிடைக்காது. போலீஸ் வாகனத்தை ஓட்டியவர் குடிபோதையில் ஓட்டியிருந்தால் நிச்சயம் அவர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உண்மைதான். ஆனால் அதே நேரத்தில் பைக் வாங்கிக்கொடுத்த பெற்றோர்களும் குற்றவாளிகள்தான். அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த விபத்தில் இருந்தாவது தமிழக பெற்றோர்கள் பாடம் புரிந்து கொள்ள வேண்டும். 18 வயது நிரம்பியவுடன் தகுந்த லைசென்ஸ் பெற்றவுடன் தங்கள் மகனை பைக் ஓட்ட அனுமதியுங்கள். இதுபோன்ற ஒரு உயிரிழப்பு மேலும் தமிழகத்தில் நடைபெறாமல் இருப்பது பெற்றோர்களின் கையில்தான் உள்ளது.