டெல்லியில் எடப்பாடி பழனிச்சாமி-அய்யாக்கண்ணு சந்திப்பு
பயிர்கடன் தள்ளுபடி, வறட்சி நிவாரணம், நதிகள் இணைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அய்யாக்கண்ணு தலைமையிலான தமிழக விவசாயிகள், டெல்லியில் கடந்த சில நாட்களா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நீட் தேர்விலிருந்து விலக்களிக்க வலியுறுத்தி, பிரதமர் மோடியைச் சந்திப்பதற்காகவும் ராம்நாத் கோவிந்த் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வதற்காகவும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றுள்ளார். காலை 11 மணியளவில் பழனிசாமி, மோடியைச் சந்திக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை டெல்லியில் போராடி வரும் அய்யாக்கண்ணு குழுவினர் சந்தித்து தங்கள் கோரிக்கைகள் குறித்து விளக்கினர்.
முன்னதாக விவசாயிகள், முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்திப்பதற்காக தமிழ்நாடு இல்லம் நோக்கி பேரணியாகச் சென்றனர். “முதல்வர் தங்களைச் சந்திக்க மறுத்தால், தமிழ்நாடு இல்லத்தை முற்றுகையிடுவோம்” என்று அய்யாக்கண்ணு கூறியிருந்தார். இதையடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அய்யாக்கண்ணுவை சந்திக்க சம்மதித்துள்ளதாக கூறப்படுகிறது