மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிலத்தை அபகரித்த வழக்கு. அழகிரி மனு தள்ளுபடி.

azhagiriதன் மீது தொடுக்கப்பட்ட நில அபகரிப்பு வழக்கை ரத்து செய்யக்கோரி முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக தலைவர் கருணாநிதியின் மூத்த மகனுமான மு.க.அழகிரி தாக்கல் செய்த மனு நேற்று மதுரை உயர் நீதிமன்ற கிளையினால் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் அழகிரி இந்த வழக்கை சந்தித்தே ஆகவேண்டும் என்ற கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகேயுள்ள தயா பொறியியல் கல்லூரிக்காக, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை  மு.க.அழகிரி சட்டத்திற்கு ஆக்கிரமிப்பு செய்ததாக இந்து அறநிலைத்துறையினரால் கடந்த சில நாட்களுக்கு முன் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தொடரப்பட்டுள்ளதாகவும், எனவே வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து அழகிரி, மதுரை உயர் நீதிமன்ற கிளையில் அழகிரி மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை நேற்று விசாரணை செய்த மதுரை உயர் நீதிமன்ற கிளை நீதிபதி கிருபாகரன், அழகிரி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Leave a Reply