தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் தொலைநிலை பி.எட். படிப்பு சேர்க்கைக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதற்கான விண்ணப்பங்களைப் பெறவும், பூர்த்தி செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கவும் நவம்பர் 30 கடைசித் தேதியாகும்.
இது குறித்து பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்தி: இரண்டு ஆண்டு பி.எட். தொலைநிலை படிப்பில் சேருவதற்கான விண்ணப்பங்கள் நவம்பர் 30-ஆம் தேதி வரை விநியோகிக்கப்படும். பல்கலைக்கழக தலைமை அலுவலகம், மாநிலத்தின் பிற பகுதிகளிலுள்ள பல்கலைக்கழக மண்டல அலுவலகங்களில் கட்டணம் ரூ. 500-க்கான வரைவோலையைச் சமர்ப்பித்து விண்ணப்பத்தைப் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க நவம்பர் 30 கடைசியாகும்.
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு, பிளஸ்-2, மூன்றாண்டு இளநிலை பட்டப் படிப்பு தகுதியுடன், தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் (என்சிடிஇ) அங்கீகாரம் பெற்ற ஆசிரியர் பட்டயப் படிப்பை நேரடியாக முடித்து, அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளியில் பயிற்சி ஆசிரியராக பணியாற்றியவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும்.
மேலும் விவரங்களுக்கு www.tnou.ac.in இணையதளத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.