தெருவை பெருக்கும் வேலைக்கு அப்ளை செய்த எம்.பி.ஏ இளைஞர்கள்
இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் பெருகி வரும் நிலையில் அரசு வேலை என்றால் தெருவை பெருக்கும் வேலையென்றாலும் ஓகே என்று எம்.பி.ஏ, பி.டெக் படித்தவர்கள் கூட முன்வந்துள்ளனர்.
ஆம் சமீபத்தில் அலகாபாத் மாநகராட்சி சார்பில் துப்புறவு தொழிலாளர்கள் வேலைக்கு விளம்பரம் வெளியானது. இந்த வேலைக்கு செய்முறை தேர்வு எழுத 1.10 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அலகாபாத் நகரில் 119 காலி இடங்களும், மாநிலத்தின் பிற மாவட்டங்களில் தலா 100 காலி இடங்களும் இருக்கும் பணியில் லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்துள்ளனர் என்பது மட்டுமின்றி அவர்களில் பலர் எம்.பிஏ மற்றும் பி.டெக் படித்துள்ளார்களாம்.
குறைந்தபட்சம் எழுத படிக்க தெரிந்தால் போதும் என்ற தகுதியுள்ள ஒரு வேலைக்கு எம்.பி.ஏ. பி.டெக் படித்தவர்கள் விண்ணப்பித்திருப்பது வேலையில்லா திண்டாட்டத்தின் கொடுமையை வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது.