சென்னையில் உள்ள பாரத் பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்புக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
2015ம் கல்வியாண்டில் பி.டெக்., பி.டெக்.,(லேட்ரல் என்ட்ரி) எம்.டெக், பி.ஆர்க் ஆகிய படிப்புகள் வழங்கப்படுகின்றன.
பி.ஆர்க் படிப்புக்கு +2வில் தேர்ச்சியுடன் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பி.டெக்., விண்ணப்பிக்க விரும்புவோர் பிளஸ் 2வில் 50 சதவீத தேர்ச்சியுடன் (கணிதம், இயற்பியல், வேதியியல்) ஆகிய பாடப்பிரிவுகளை எடுத்திருக்க வேண்டும்.
எம்.டெக்.,படிப்புக்கு இளங்கலை பொறியியல் பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்ப படிவத்தை பல்கலைக்கழக இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ரூ.900 வரைவோலை எடுத்து விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். பல்கலை நடத்தும் (BEEE) நுழைத்தேர்வு அடிப்படையில் தகுதியனவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
ஏப்ரல் 15 விண்ணப்பிக்க கடைசி நாளாகும். நுழைவுத்தேர்வு ஏப்ரல் 25ம் தேதி நடத்தப்படுகிறது. கூடுதல் தகவல்களுக்கு www.bharathuniv.ac.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.