யோகா குரு பாபா ராம்தேவ் அறிமுகப்படுத்தும் இயற்கை நூடுல்ஸ். மேகிக்கு போட்டியா?

யோகா குரு பாபா ராம்தேவ் அறிமுகப்படுத்தும் இயற்கை நூடுல்ஸ். மேகிக்கு போட்டியா?
noodles
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மேகி நூடுல்ஸ் உணவுப்பொருளில் காரியத்தின் அளவு அனுமதிக்கப்பட்டதைவிட அதிகமாக இருந்ததாக கூறி இந்தியாவின் பல மாநிலங்களில் தடை செய்யப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் வெளியான நீதிமன்ற உத்தரவின்படி மீண்டும் மேகி நூடுல்ஸ் விற்பனைக்கு வரவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மேகி நூடுல்ஸ்க்கு போட்டியாக யோகா குரு பாபா ராம்தேவுக்கு சொந்தமான பதஞ்சலி நிறுவனம் நூடுல்ஸ் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

இதுகுறித்து பதஞ்சலி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது: “பதஞ்சலி நூடுல்சில் காரீயம், ரசாயன உப்பு ஆகியவை கலக்கப்படவில்லை. உடல் நலத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இதை தயாரித்துள்ளோம். பிற நிறுவனங்களின் நூடுல்ஸ்கள் பாமாயில் பயன்படுத்தி தயாரிக்கப்படுகின்றன. எங்கள் நூடுல்ஸ், அரிசியின் தவிட்டில் இருந்து எடுக்கப்படும் சமையல் எண்ணெயை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளது. 70 கிராம் எடையுள்ள பாக்கெட் 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

டிசம்பர் மாதத்திற்குள் நாடு முழுவதும் இந்த நூடுல்ஸை விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். இதற்காக, மத்தியபிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் தயாரிப்பு மையங்களை அமைத்துள்ளோம்”

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply