காங்கிரஸ் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த யோகா குரு பாபா ராம்தேவ் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறி அக்கட்சி, பாபா ராம்தேவிற்கு அவதூறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. காங்கிரஸ் கட்சியினர் ஓரினச் சேர்க்கையாளர்களாக இருப்பதால் அதனை ஆதரிப்பதாக பாபா ராம்தேவ் கூறியது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
இந்த கருத்தை திரும்ப பெறுவதோடு, பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறி மத்தியப் பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் சட்ட மற்றும் மனிதஉரிமை பிரிவின் பொதுச் செயலாளர் பிரமோத் குமார் திவேதி, பாபா ராம்தேவிற்கு அவதூறு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
7 நாட்களுக்குள் எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கேட்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.