வெள்ளத்தில் பாதித்த மக்களுக்கு காலாவதியான உணவு பொருட்கள்: பதஞ்சலி மீது குற்றச்சாட்டு

வெள்ளத்தில் பாதித்த மக்களுக்கு காலாவதியான உணவு பொருட்கள்: பதஞ்சலி மீது குற்றச்சாட்டு

சமீபத்தில் அஸ்ஸாம் மாநிலத்தில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஏராளமான சேதம் அடைந்தது அனைவரும் அறிந்ததே. இந்த பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தொண்டு நிறுவனங்கள் உணவுப்பொருட்கள், உடைகள் மற்றும் சில பொருட்களை வழங்கி வருகிறது

இந்த நிலையில் பாபா ராம்தேவ் அவர்களின் பதஞ்சலி நிறுவனம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு சுமார் ரூ.12 மதிப்பிலான உணவுப்பொருட்களை வழங்கியுள்ளது.

ஆனால் இந்த பொருட்களை வாங்கிய பொதுமக்களில் பலர் அதிர்ச்சி அடைந்தனர். காரணம் கிட்டத்தட்ட பாதி பொருட்களுக்கும் மேல் காலாவதியான பொருட்களாம். அக்டோபர் 2016 உடன் காலாவதியான பொருட்களை வெள்ளத்தால் பாதித்த மக்களுக்கு பதஞ்சலி வழங்கியுள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Leave a Reply