கண்கள் இருக்க வேண்டிய இடத்தில் சிறிய பள்ளம். இங்கிலாந்தில் பிறந்த அதிசய குழந்தை.

babyஇங்கிலாந்து நாட்டில் வாழும் ஒரு பெண்ணுக்கு கண்களே இல்லாமல் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தைக்கு கண்கள் இருக்க வேண்டிய இடத்தில் சிறிய குழி மட்டும் இருப்பதாகவும், இதுபோன்ற தன்மையுடன் குழந்தை பிறப்பது அரிதினும் அரிதான நிகழ்வு என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 24 வயது டெய்ஸி ஸ்மித் மற்றும் ஆண்ட்ரூ ஸ்மித் தம்பதிகளுக்கு சமீபத்தில் பெண் குழந்தை ஒன்று பிறந்தது. இந்த குழந்தையை பார்த்ததும் மருத்துவர்கள் திடுக்கிட்டனர். புதிதாக பிறந்த அந்த குழந்தைக்கு கண்கள் இருக்க வேண்டிய இடத்தில் ஒரு சிறிய பள்ளம் மட்டுமே இருந்தது.

இதுகுறித்து குழந்தையின் பெற்றோர்கள் செய்தியாளர்களிடம் கூறியபோது, ‘இந்த குழந்தை கருவில் இருக்கும்போது இந்த குழந்தைக்கு கண்கள் இல்லை என்பதை சிடி ஸ்கேன் மூலம் தெரிந்துகொண்டதாகவும், மருத்துவர்கள் இந்த குழந்தையை கலைத்துவிடும்படி அறிவுரை கூறியும் அதை கேட்காமல் இந்த குழந்தையை தான் பெற்றெடுக்க விரும்பியதாகவும் தெரிவித்த டெய்ஸி ஸ்மித், மற்ற குழந்தைகளை போல இந்த குழந்தையை தாங்கள் அன்புடனும் பாசத்துடனும் வளர்ப்போம் என்று கூறினர். இந்த தம்பதிக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

baby 1

Leave a Reply