தெய்வத்திருமகள் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான குழந்தை நட்சத்திரம் பேபி சாரா, தற்போது விஜய் இயக்கும் கிரிடம் படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு சம்பளமாக ரூ.40 லட்சம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
சைவம் படத்திற்காக இயக்குனர் விஜய், பேபி சாராவை ஒப்பந்தம் செய்தபோது, 40 நாட்கள் கால்ஷீட்டுக்காக ரூ.40 லட்சம் சம்பளம் பெசி ஒப்பந்தம் செய்தாராம். நாள் ஒன்றுக்கு ரூ.1 லட்சம் சம்பாதிக்கும் சாராவின் தற்போதைய வயது எட்டு. ஆறுவயதில் தெய்வத்திருமகள் படத்தில் அறிமுகமான சாரா, சில விளம்பரப்படங்களிலும், நடித்துள்ளார். விளம்பரப்படங்களில் நடிக்க ஒரு நாளைக்கு ரூ.2 லட்சம் சம்பளம் பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சாரா தற்போது விஜய்யின் சைவம் தவிர விழித்திரு என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தை ‘அவள் பெயர் தமிழரசி’ என்ற படத்தை இயக்கிய மீரா கதிரவனனியக்கி வருகிறார்.