கண்களே இல்லாமல் பிறந்த குழந்தை. கதறியழும் சீன நாட்டின் தாய்
சீனாவில் இரண்டு கண்களும் இல்லாமல் கண்கள் உள்ள இடமே தோலினால் மூடப்பட்டு ஒரு அதிசய குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இந்த குழந்தைக்கு உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக தோன்றும்போது கண்கள் தோன்றவே இல்லை என்றும் இதனால் இந்த குழந்தைக்கு பார்வை கிடைக்க வாய்ப்பில்லை என்றும் கூறியுள்ளனர்.
செப்டம்பர் 20ஆம் தேதி சீனாவில் உள்ள Guangzhou என்ற பகுதியில் Liu Peihua என்ற பெண்ணுக்கு கண்களே இல்லாமல் ஒரு குழந்தை பிறந்துள்ளது. முதலில் இந்த குழந்தையை பார்த்து அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள் பின்னர் அனைத்து சோதனைகளை செய்த பின்னர் இந்த குழந்தைக்கு பார்வை கிடைக்க வாய்ப்பே இல்லை என்று கூறிவிட்டனர்.
இதனால் இந்த குழந்தையின் தாய் கதறி அழுத காட்சி காண்போரை கண்ணீர் வரவழைத்தது. மிக அரிதாக ஒரு லட்சத்திற்கு ஒரு குழந்தைக்கு இதுபோன்று நடக்க வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.