உத்தரபிரதேச மாநிலத்தில் பிறந்த ஒரு குழந்தை தும்பிக்கையுடன் பிறந்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அலிகார் மாவட்டத்தின் ஒரு கிராமத்தில் கடந்த வியாழக்கிழமை பிறந்த ஒரு பெண் குழந்தைக்கு தும்பிக்கை இருந்ததாகவும் இந்த குழந்தை கடவுளின் அவதாரம் என்றும் அந்த பகுதியினர்களிடம் இருந்து செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
தும்பிக்கையுடன் பிறந்த இந்த குழந்தைக்கு கணபத்னி என உறவினர்கள் பெயரிட்டுள்ளனர். இந்து மதத்தின் முக்கிய கடவுளான விநாயகரின் மனைவி என்று பொருள் தரும்படி இந்த பெயர் விளங்குவதாகவும் குழந்தையினர் உறவினர்கள் கூறியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன
ஆனால் இந்த குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் கூறும்போது, ஊட்டச்சத்து மற்றும் மாசு காரணமாகவும், மரபணுவில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவும் இந்த குழந்தைக்கு தும்பிக்கை போன்ற ஒரு அமைப்பு இருப்பதாக கூறியுள்ளனர்.
இந்த குழந்தையின் தந்தை காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். தினமும் ரூ.250 மட்டுமே வருமானம் செய்யும் இவர், தனது மகளின் ராசியால் தனக்கு பெரும் செல்வம் கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளாராம். ஏற்கனவே இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.