மோசமான பெண்கள் மட்டுமே வாய்ப்புக்காக படுக்கைக்கு செல்வார்கள். எம்பியின் சர்ச்சை பேச்சு

மோசமான பெண்கள் மட்டுமே வாய்ப்புக்காக படுக்கைக்கு செல்வார்கள். எம்பியின் சர்ச்சை பேச்சு

கேரள மாநில எம்பியும் நடிகருமான இன்னொசெண்ட் என்பவர் மலையால திரைப்பட நடிகர் சங்கத்தின் தலைவராகவும் இருந்து வருகிறார். இவர் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது மோசமான பெண்கள் மட்டுமே வாய்ப்புகளுக்காக படுக்கைக்கு செல்வார்கள் என்று கூறியுள்ளார்.

மலையாள திரையுலகை பொருத்தவரை படுக்கைக்கு நடிகைகளை அழைக்கும் வழக்கம் இயக்குனர், தயாரிப்பாளர் உள்பட யாருக்கும் இல்லை என்றும், அவ்வாறு எந்த புகாரும் எந்த நடிகையிடம் இருந்து நடிகர் சங்கத்திற்கு வரவில்லை என்றும் கூறியுள்ளார்

மோசமான ஒருசில பெண்கள் மட்டுமே படுக்கைக்கு சென்று அட்ஜெஸ்ட் செய்து வாய்ப்புகளை தேடி வருவதாகவும் அவர் தெரிவித்தார். இன்னோசெண்ட் கூறிய இந்த கருத்து மலையாள திரையுலகை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply