தமிழகத்தில் 600க்கும் அதிகமான திரையரங்குகளில் ‘பாகுபலி 2’.

தமிழகத்தில் 600க்கும் அதிகமான திரையரங்குகளில் ‘பாகுபலி 2’.

இந்தியாவின் பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் ‘பாகுபலி 2’ வரும் 28ஆம் தேதி பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் இந்த படத்தின் எதிர்பார்ப்பு ரிலீஸ் தேதி நெருங்க நெருங்க அதிகரித்து கொண்டே வருகிறது.

ஏப்ரல் 28ஆம் தேதி ‘பாகுபலி 2’ படத்துடன் மோத எந்த படமும் முன்வராததால் கிட்டத்தட்ட தமிழகம் முழுவதும் 600க்கும் அதிகமான திரையரங்குகள் இதுவரை புக் ஆகியுள்ளதாகவும், இன்னும் ஒருசில நாட்களில் இந்த எண்ணிக்கை உயர வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதற்கு முன்னர் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘கபாலி’ மற்றும் தல அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ ஆகிய படங்கள் மட்டுமே தமிழகத்தில் 600க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியான நிலையில் தற்போது அந்த படங்களுக்கு இணையாக ‘பாகுபலி 2’ படமும் ரிலீஸ் ஆகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

ரூ.200 கோடிக்கும் மேல் செலவு செய்து உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ராணா, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன், உள்பட பலர் நடித்துள்ளனர்.

Leave a Reply