இங்கிலாந்து ராணிக்காக ‘பாகுபலி 2’ சிறப்புக்காட்சி
பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளிவந்து உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆன படம் ‘பாகுபலி. இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை உலகமே எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கும் நிலையில் இந்த படம் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.
ஆனால் அதற்கு முன்னர் பிரதமர் மோடி மற்றும் இங்கிலாந்து ராணி எலிசபெத் உள்பட சர்வதேச பிரபலங்களுக்கான ஒரு சிறப்பு காட்சி திரையிட எஸ்.எஸ்.ராஜமெளலி திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
இங்கிலாந்து நாட்டில் இந்தியாவின் 70-வது சுதந்திர ஆண்டை கொண்டாடும் வகையில் பிரிட்டிஷ் பிலிம் இன்ஸ்ட்டியூட் ஏப்ரல் 24 முதல் பல திரைப்படங்களை திரையிடவுள்ளது. இதில் ஏப்ரல் 27ஆம் தேதி ‘பாகுபலி 2’ திரையிடப்படும் என தெரிகிறது.
அன்றைய தினத்தில் இந்திய பிரதமர் நரேந்திரமோடி மற்றும் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபத் உள்பட பல பிரபலங்கள் ‘பாகுபலி 2’ம் பாகத்தை இவ்விழாவில் காணவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு மிகவிரைவில் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.