மீண்டும் ரூ.100 கோடி வசூல் செய்யப்போகிறதா பாகுபலி?
கடந்த ஆண்டு வெளியான ‘பாகுபலி’ திரைப்படம் உலக அளவில் சூப்பர் ஹிட் ஆகியதோடு, தென்னிந்தியாவில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற பெருமையை பெற்றது. இந்த படம் தற்போது சீன, ஜப்பானிய மொழிகளில் டப் செய்யப்பட்டு வருவதாக கூறப்படும் நிலையில் வரும் ஜூன் 8ஆம் தேதி முதல் பிரெஞ்ச் மொழியில் வெளியாக உள்ளது.
இந்த தகவலை இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் தன்னுடைய டுவிட்டரில் உறுதி செய்துள்ளார். பிரான்ஸ் நாட்டில் பிரெஞ்ச் மொழியில் ‘பாகுபலி’ படம் மிக அதிக திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாகவும் இதன் மூலம் இந்த படம் மேலும் ரூ.100 கோடி வசூல் செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஏற்கனவே இந்த படம் ரூ.600 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ள நிலையில் பிரெஞ்ச், சீன, ஜப்பான் மொழிகளில் ரிலீஸ் ஆனால் ரூ.100 கோடியை நெருங்கிவிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ராணா, ரம்யாகிருஷ்ணன், சத்யராஜ் உள்பட பல நடிகர்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம் வரும் 2017 ஆம் ஆண்டில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.