ரஜினி பட வசூலை முறியடிக்குமா பாகுபலி?

bahubaliஇதுவரை தென்னிந்திய படங்களிலேயே அதிக வசூல் செய்த திரைப்படம் என்னும் பெருமையை பெற்ற எந்திரன் படத்தின் வசூல் சாதனையை நாளை மறுநாள் வெளிவரவிருக்கும் பாகுபலி’ திரைப்படம் முறியடித்துவிடும் என விநியோகிஸ்தர்கள் தரப்பில் இருந்து கூறப்பட்டு வருகின்றது.

தமிழகத்தில் மட்டும் சுமார் 600 தியேட்டர்களிலும், உலகம் முழுவதும் சுமார் 6,000 தியேட்டர்களிலும் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என நான்கு மொழிகளில் பிரமாண்டமாக ரிலீஸாகவுள்ள ‘பாகுபலி’ படத்திற்கு மாபெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தை விநியோகிஸ்தர்கள் போட்டி போட்டுக்கொண்டு பெரும் விலை கொடுத்து வாங்கி ரிலீஸ் செய்கின்றனர்.

கடந்த 2010ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கிய எந்திரன் திரைப்படம் ரூ.210 கோடி வசூல் செய்ததாக சன் டிவி நெட்வொர்க் தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த வசூலை பாகுபலி’ படம் முறியடிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Leave a Reply