‘பைரவா’ டீசர் ரிலீஸ் எப்போது? புதிய தகவல்
இளையதளபதி விஜய் நடித்து வரும் ‘பைரவா’ படத்தின் டீசர் நாளை நள்ளிரவு 12.01 மணிக்கு வெளிவரவுள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் அதிகபட்ச உற்சாகத்தில் உள்ளனர்.
இந்த படத்தின் டீசர் நாளை நள்ளிரவு யூடியூப் இணையதளத்திலும் நாளை மறுநாள் முதல் திரையரங்குகளிலும் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. காஷ்மோரா, கொடி ஆகிய இரண்டு படங்களின் இடைவேளையின்போதும் ‘பைரவா’ டீசர் வெளியாகவுள்ளதால் இந்த படங்களை பார்க்க வரும் ரசிகர்களுக்கு இதுவொரு போனஸ் விருந்து ஆகும்
இந்நிலையில் பைரவா படத்தின் டீசர் தற்போது சென்சார் ஆகிவிட்டதாகவும் இந்த டீசருக்கு சென்சார் அதிகாரிகள் ‘யூ’ சர்டிபிகேட் அளித்துள்ளதாகவும், படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.