தீபாவளி, கிறிஸ்துமஸ், பொங்கல் விருந்து அளிக்கும் ‘பைரவா’ விஜய்

தீபாவளி, கிறிஸ்துமஸ், பொங்கல் விருந்து அளிக்கும் ‘பைரவா’ விஜய்

bairavaஇளையதளபதி விஜய் நடித்த ‘பைரவா’ படத்தின் டீசர் தீபாவளி விருந்தாக சமீபத்தில் வெளியாக பல சாதனைகளை தகர்த்து வரும் நிலையில் விரைவில் கிறிஸ்துமஸ் மற்றும் பொங்கல் விருந்து தரவும் ‘பைரவா’ படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் ஆகியவை கிறிஸ்துமஸ் விருந்தாகடிசம்பர் 25 அன்று வெளியாகவுள்ளதாகவும், இந்த படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக அனைத்து ஏற்பாடுகளும் சுறுசுறுப்பாக நடந்து வருவதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

விஜய், கீர்த்தி சுரேஷ், சதீஷ், ஜெகபதிபாபு, டேனியல் பாலாஜி, சுதன்ஷி பாண்டே, உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். வரும் 2017ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளிவரவுள்ள இந்த படத்தை விஜயா புரடொக்ஷன்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. இந்த படத்தை ‘அழகிய தமிழ்மகன்’ பரதன் இயக்கி வருகிறார்.

Leave a Reply