சென்னை பாக்ஸ் ஆபீஸில் ரூ.7 கோடியை நெருங்கிய ‘பைரவா’
இளையதளபதி விஜய் நடித்த ‘பைரவா’ திரைப்படம் கடந்த 12ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளிவந்தது. இந்த படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் வெளியானபோதிலும், வசூலில் கிங் ஆகவே உள்ளது. மேலும் கடந்த சில நாட்களாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டம் காரணமாக வசூலில் பாதிப்பு ஏற்பட்டிருந்த நிலையில் சென்னையில் இந்த படம் ரூ.7 கோடியை நெருங்கிவிட்டது.
சென்னையில் மட்டும் இந்த படம் ரூ.6,51,08,740 வசூலாகியுள்ளதாகவும் மிக விரைவில் ரூ.7 கோடியை இந்த படம் வசூல் செய்துவிடும் என்றும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி கடந்த குடியரசு தின விடுமுறை நாளில் வேறு பெரிய ஸ்டார்களின் படங்கள் வராததால் கடந்த வார இறுதியில் மட்டும் இந்த படம் சென்னையில் ரூ.35 லட்சம் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் விஜய்யின் அடுத்தபடமான ‘விஜய் 61’ திரைப்படம் அடுத்த வாரம் தொடங்கவுள்ளது. இந்த படத்தை ‘தெறி’ இயக்குனர் அட்லி இயக்கவுள்ளார்