விஜய்யின் ‘பைரவா’ இந்தியா-சிங்கப்பூர் சென்சார் தகவல்கள்

விஜய்யின் ‘பைரவா’ இந்தியா-சிங்கப்பூர் சென்சார் தகவல்கள்

இளையதளபதி விஜய் நடித்துள்ள ‘பைரவா’ திரைப்படம் வரும் ஜனவரி 12ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்தின் வியாபாரங்கள் முற்றிலும் முடிந்துவிட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் சென்சார் தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் ‘யூ’ சான்றிதழ் கொடுத்துள்ளனர். அதுமட்டுமின்றி படத்தை இயக்கிய இயக்குனர் பரதனையும் அவர்கள் பாராட்டியுள்ளனர். சென்சார் அதிகாரிகளில் பாராட்டு கிடைத்துள்ளதால் படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் இந்த படம் தற்போது சிங்கப்பூரிலும் சென்சார் ஆகிவிட்டது. இந்திய சென்சார் சான்றிதழ் யூ/ஏ க்கு இணையான P13 என்ற சான்றிதழை இந்த படம் பெற்றுள்ளது. இதேபோல் மற்ற நாடுகளின் சென்சார்கள் இன்னும் ஓரிரு நாட்களில் முடிந்துவிடும் என்றும் பொங்கல் திருநாளில் உலகம் முழுவதிலும் உள்ள விஜய் ரசிகர்களுக்கு விருந்தாக இந்த படம் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply